நாளை செட்டிபாளையத்தில் வரலாற்று நூல் வெளியீட்டு விழா!


 

 

( வி.ரி. சகாதேவராஜா)



 "செட்டிபாளையம் கிராம மக்களின் வாழ்வும் வளமும்"( The life and prosperity of Chettipaalayam people) என்ற நூலின் வெளியீட்டு விழா நாளை (16) திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் நடைபெற இருக்கிறது.

ஓய்வுநிலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சிதம்பரப்பிள்ளை அமலநாதன் தொகுத்த இந் நூலின் வெளியீட்டு விழா,
 கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ.  கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற இருக்கிறது .

பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோகண ஆகியோர் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

மேலும் பல அதிதிகள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.