ஐக்கிய மக்கள் சக்தியின் மண்முனை வடக்கு பிரதேச கட்சி அமைப்பாளர் களின் ஏற்பாட்டில் ",சகலருக்கும் ஜனாதிபதி" சஜித் முதலாவது பிரதான கூட்டம்








வரதன்



 

 

ஜனாதிபதி   தேர்தலில்  தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது ,ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதான அமைப்பாளர் சோ. கணேச மூர்த்தியின்  வழிகாட்டலின் கீழ் சகலருக்கும் ஜனாதிபதி சஜித் எனும் தலைப்பின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக கட்சி அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் நேற்று இரவு இருதயபுரம் பகுதியில் முதலாவது பிரதான கூட்டம் பிரச்சார ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரச்சார செயலாளர் வெற்றிவேல் சுதாகரன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது


பிரச்சாரக் கூட்டத்திற்கு மண்முனை  வடக்கு பிரதேச ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்பாளர் ரகுநாதன் மற்றும் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி ரவீந்திரன் கண்ணகி கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கட்சியின் பிராந்திய அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்காக தங்கள் பிரச்சார கருத்துக்களை பொதுமக்களிடம் முன்வைத்தனர்.