தபால் வாக்குச் சீட்டின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட ஒருவருக்கு எதிராக விசாரணை .

 


தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

குறிக்கப்பட்ட தபால் வாக்குச் சீட்டின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட வவுனியா பிரதேச அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.