தேர்தல் தினமாகிய நாளை நேர காலத்துடன் சென்று தமது வாக்குகளை அளித்து விட்டு அமைதியான முறையில் நீதியானதும் சமாதானமான வன்முறைகள் அற்ற சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை வழங்குமாறும் நாம் வேண்டி கேட்டுக்கொள்கின்றோம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் ஐரோப்பிய யூனிய பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் விசேட தேவை உடையோர் தூர இடங்களில் இருந்து வாக்களிக்க விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுக்க உள்ளது -மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலக உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம் பி எம் சுபியான் தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக மாவட்டத்தில் 4 லட்சத்தி 49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் வாக்களிப்பதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் திணைக்களம் பொதுமக்களிடம் விசேடமான வேண்டுகோள் அன்றை விடுக்கின்றது தேர்தல் தினமாகிய நாளை நேர காலத்துடன் சென்று தமது வாக்குகளை அளித்து விட்டு அமைதியான முறையில் நீதியானதும் சமாதானமான வன்முறைகள் அற்ற சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை வழங்குமாறும் நாம் வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்
தேர்தல் கடமைகளுக்காக 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக வெளிநாட்டு உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் தமது பணிகளை முன்னெடுத்து வருவதுடன் ஐரோப்பிய யூனிய பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
வாக்களிப்பு தேர்தல் பாதுகாப்பு கண்காணிப்புக்காக போலீசார் விசேட கண்காணிப்பு வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வருகின்றனர். மாவட்டத்தில் விசேட தேவை உடையோர் மற்றும் தூர இடங்களில் இருந்து வாக்களிக்க வருவதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் அப்பகுதி கிராம சேவகர் ஊடாக தமது பணிகளை முன்னெடுக்க உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலக உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம் பி எம் சுபியான் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்