வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு ஒரு வருடத்திற்கும் மேற்படாத விளக்கமறியல் ?

 


வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு அபராதத் தொகைக்கு மேலதிகமாக ஒரு வருடத்திற்கும் மேற்படாத விளக்கமறியல் விதிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.