தமிழ்மக்கள் தொடர்பில் அநுர குமார திஸாநாயக்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக சிறிது காலம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
ரணிலும் சஜித்தும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அநுர குமாரவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கமாட்டாது.
அத்துடன் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரகலிய போராட்டத்தில் பங்கேற்றவர்களை ரணில் விக்ரமசிங்க அரசியல் ரீதியாக இணைக்காமல் விட்டது அவரது தோல்விக்கு வழி வகுத்ததுடன் அந்த மாணவர் அமைப்பை தம்முடன் இணைத்த அநுர குமார ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சுலபமாக்கி விட்டது.