காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

 


2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பெறுபேறுகளின் பிரகாரம், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் குலுனி மெட்சரா மற்றும் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் விமன்சா ஜயனதி ரத்னவீர ஆகியோர் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் பெறுபேறுகளின்படி மூன்று மாணவிகள் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரியின் செஷானி செஹங்சா ஜயவர்தன, நுகேகொட அனுலா கல்லூரியின் மெதுகி சமோதி பெரேரா மற்றும் காலி சங்கமித்த மகளிர் கல்லூரியின் நதுன் பமுதிதா ரணவக்க ஆகியோர் நான்காம் இடத்தை பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏழாவது இடத்திற்கு நான்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நுகேகொட அனுலா வித்தியாலயத்தைச் சேர்ந்த நெமதினி வொனாரா அதிகாரி, கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரியின் தத்சரா கவிந்தி, பாணந்துறை ஸ்ரீ சுமங்கல மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தமாஷி தனஞ்சனா விக்ரமகே மற்றும் மாத்தறை ராகுல வித்தியாலயத்தைச் சேர்ந்த சகுண சதீஷான் சமரவிக்ரம ஆகியோர் ஏழாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளனர்.