செப்டெம்பர் 14ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாவிடின் அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் நாள் வரை வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தபால் திணைக்களம் 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்துள்ளதாகவும் ராஜித ரணசிங்க கூறியுள்ளார்..