தமிழரசு கட்சி ஆதரவு தெரிவித்துள்ள விடயத்தை நாம் பாராட்டுகின்றோம் வடக்கு கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் மூவின மக்களாலும் நேசிக்கப்பட்டு ஒரு வெற்றி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M l a m ஹிஸ்புல்லா
நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது நிர்வாகத்தில் மிகச் சிறப்பாக பொருளாதாரக் கட்டி எழுப்பப்பட்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களது எதிர்காலத்தை முன்னேற்றக் கூடிய வகையி லும் சிறப்பானதொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து அவர் தேர்தல் களத்தில் நிற்கின்றார்
இன்று தமிழரசு கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடயத்தை நாம் வரவேற்று பாராட்டுகின்றோம்
இதன் மூலம் வடக்கு கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் மூவின மக்களாலும் நேசிக்கப்பட்டு ஒரு வெற்றி வேட்பாளராக காணப்படுகின்றார்
இதன் மூலம் வடக்கு கிழக்கில் நிலவுகின்ற அதிகார பிரச்சனைகளுக்குரிய தீர்வு அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளுக்கான விசேட அபிவிருத்தி திட்ட செயற்பாடுகளை வெளிநாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்க உள்ளார் எனவே வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வெற்றியின் பங்காளர்களாக வேண்டு மென
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்