வரதன்
நாளை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்குமான வாக்குச்சாவடிகளுக்குரிய வாக்குப் பெட்டிகள் இன்று காலை இந்து கல்லூரி மைதானத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 442 வாக்குச்சாவடிகள் அமைக்க ப்பட்டுள்ளதுடன் கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும் மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும் பட்டிருப்பு தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டு ள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலக உதவி தேர்தல் ஆணையாளர் எம் பி எம் சுபியான் தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக இம்முறை 6250 அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ளதுடன் மாவட்டத்தில் மொத்தமாக 1516 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதுடன் இதற்கான ஒத்துழைப்பை அதிரடிப்படையினரும் இணைந்து வழங்க உள்ளனர்