இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது

 


 

 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக  ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 12  ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.

379 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 337 ரூபாவாகும்.

317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 307 ரூபாயாகும்.

355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்  லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படா நிலையில் ஒரு லீற்றர் 202 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம் சினோபெக் நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.