வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை விளம்பரப்படுத்தும் நோக்கில் பண விநியோகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிண்ணியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனது வீட்டை சுற்றி வசிப்பவர்களுக்கு தலா 5000 ரூபா பணத்தை விநியோகித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளரை முன்னிலைப்படுத்தவே இவ்வாறு செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.