மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய பொன் அணிகளின் கிரிக்கெட் மற்றும் விவாத சமர் வீரர்களை கௌரவித்தல்.

 















 

 




 





 

 




 

 

 

பொன் அணிகளின் கிரிக்கெட் மற்றும் விவாத சமர் வீரர்களை கௌரவித்தல்
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயத்திற்கும் இடையிலான 29வது பொன் அணிகளின் சமர் போட்டியில்  சிவாநந்த வித்தியாலய பாடசாலை அணியினர் 8 விக்கெட்டால் வெற்றிபெற்று தொடந்து 2வது  முறையாகவும் கிண்ணத்தை எமது பாடசாலைக்கு பெற்றுத்தந்துள்ளனர். 


அதேபோன்று இம்முறை கிரிக்கெட் சமரை முன்னிட்டு விவாத சமரும் இடம்பெற்று இருந்தது. இவ் விவாத சமருக்கு வழங்கப்படும் கிண்ணமாக விபுலானந்தர் சவால் கிண்ணம் எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. முதல் முறை ஆரம்பிக்கப்பட்ட இவ் சவால் கிண்ணத்தினையும் எமது விவாத அணியினர் வெற்றிபெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


இவ் இரண்டு சமர்களிலும் வெற்றிபெற்ற எமது வீரர்களை கௌரவிக்கும் செயற்பாடு சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் ஆசியுடன் தொடங்கி இராமகிருஷ்ண மிஷனில்  இருந்து வீரர்கள் அழைத்துவரப்பட்டு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் திரு.S. தயாபரன் அவர்களின்  தலைமையில் வைபவம் இடமபெற்றது. 

இவ் நிகழ்வில், பிரதி அதிபர்கள் திரு.S. மதிமோகன்,  திரு.T. குலேந்திரகுமார் ஆகியோருடன் பழைய மாணவர் சங்க தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான திரு வ.வாசுதேவன் , ஆசிரியர்கள், கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஆலய முகாமையாளர் மற்றும் பொருளாளர், பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் திருமதி. திலகம் ஹரிதாஸ் ஆசிரியை , திரு. S.ஜெயராஜா விரிவுரையாளர், பழைய மாணவர் சங்க நிதி சேகரிப்பு இணைப்பு செயலாளர் திரு.K. முரளீதரன், பழைய மாணவர் சங்க விளையாட்டு இணைப்பு செயலாளர், பட்டமுன் செயலாளர் திரு. டீசன்  மற்றும் பாடசாலை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் திரு. தி. ரிசாந்த்   ஆகியோருடன் எமது வீரர்களும் கலந்து கொண்டிருந்தனர். இவ் நிகழ்வில் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கான புத்தக கொள்வனவுக்குரிய   Gift Voucher வழங்கிவைக்கப்பட்டது . மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களும்  கௌரவிக்கப்பட்டனர்.