பொதுக் கூட்டங்கள் கூட முன்னறிவிப்பின்றி வன்முறையாக மாறக்கூடும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.

 


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயண ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் இலங்கையிலுள்ள அமெரிக்கர்களிடம் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும், இலங்கையில் போராட்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதியான பொதுக் கூட்டங்கள் கூட முன்னறிவிப்பின்றி வன்முறையாக மாறக்கூடும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.