மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

 


மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால், புதிய பாராளுமன்ற அமர்வின் பின்னரே ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.