அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

 


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து இந்திய பிரதமா் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான சாகா் முன்னெடுப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு சிறப்பிடம் உள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நலனுக்காக இந்தியா-இலங்கை இடையிலான பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அநுரகுமாரவுடன் நெருங்கிப் பணியாற்ற ஆவலாக உள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.