இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் கடந்த ஐந்து வருடங்களாக கணிசமான அளவில் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டில் பதிவான குழந்தை பிறப்பு எண்ணிக்கையை விட 2023ஆம் ஆண்டில் பதிவான குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவின் அறிக்கைகள் கூறுகின்றன.

நாடளாவிய ரீதியில் நிலவும் முன்பள்ளிகளை மூடும் நிலை வரையில் இது மாறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் சில வருடங்களுக்குள் பாடசாலைகளுக்குள் பிள்ளைகளை உள்வாங்கும் நிலை குறைவடைந்து, குறைவான பிள்ளைகள் உள்ள பாடசாலைகளை மூடும் நிலை ஏற்படலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.