பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

 


இலங்கையின் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக மிகுந்த ஆர்வத்துடன் செல்லும் நாடாக தற்போது கொரியா மாறியுள்ளது.

காரணம் அந்த நாட்டில் வேலை செய்யும் இந்நாட்டு இளைஞர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

இந்நிலையில் கொரிய மொழி பரீட்சையை இலங்கையில் பலர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

காரணம் இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அந்நாட்டு வேலைகளுக்கு அதிக கவர்ச்சிகரமான சம்பளம்.

இவ்வாறான நிலையில் கொரிய மொழிப் பரீட்சையின் (9-1 Point System Examination) முடிவுகள் இன்று (09) வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவிப்பு ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று உரிய முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.