“யுக்திய” நடவடிக்கை இடை நிறுத்தம் .

 


“யுக்திய” நடவடிக்கைகளுக்காக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

யுக்திய பணிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை ஈடுபடுத்தியதால், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரிவுகளின் கடமைகள் தடைப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.