ரீ.எல்.ஜவ்பர்கான் & செய்திஆசிரியர்
கிழக்கு மாகாணத்திற்கான தலசீமியா பிராந்திய மையம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் இன்று(27) மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரன் திறந்து வைத்தார்.
சுகாதார அமைச்சின் 15 இலட்சம் ரூபாய் செலவில் இப் பிராந்திய மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தலசீமியா நோயாளிகளின் தொகை அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் 2000 பேர் இந்நோயினால் பாதிக்கப்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 தலசீமியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்றா நோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.
பிராந்திய மையம் திறந்து வைக்கும் நிகழ்வில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியதிகாரி டாக்டர் எஸ்.குணராஜசேகரம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் டாக்டர் மைதிலி உட்பட சுகாதார அதிகாரிகள்,தாதியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.