வரதன்
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வாக்குரிமை என்பது அவசியமானதாகும் இடம்பெறும் தேர்தலை எவ்வித வன்முறைகள் இன்றி சந்தர்ப்பத்தினை தவறவிடாமல் அமைதியான முறையில் முன்னெடுக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும்- ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரிவி சாந்த கணேச குருக்கள்.
நாளை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் இத்தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தை கொண்டிருக்க வேண்டியது மிக அவசிய மானதாகும் ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வாக்குரிமை என்பது அவசியமா னதாகும் தமது பொன்னான வாக்குகளை செலுத்துவது கட்டாயமா னதாகும் இந்த சந்தர்ப்பத்தினை தவறவிடாமல் கலவரங்கள் இன்றி அமைதியான முறையில் இதனை நிறைவேற்ற சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானதாகும்
இலங்கை ஜனநாயக நாட்டில் எமது வாக்குரிமை ஆனது எவ்வாறான வேலை வேலைப்பளு இருந்தாலும் இத்தருணத்தை நன்கு பயன்படுத்தி நாட்டுக்குத் தேவையான கடந்த கால பொருளாதார நெருக்கடி யில் இருந்து துன்பங்களை மீண்டு வர வேண்டி ஒரு சரியான தலைவரை தெரிவு செய்வது எமது கடமையாகும் அது விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த தேர்தல் காலத்தை சந்திப்பது அவசியமானதாகும் இந்த தேர்தலை நெருக்கடிகள் இல்லாமல் அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு நாட்டின் சகல மக்களும் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும்
ஜனாதிபதி தேர்தலில் சகல மக்களும் தங்களது வாக்குரிமையை உரிய காலத்தில் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் சென்று பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இடம்பெறும் தேர்தலில் நாட்டை வழிநடத்தக்கூடிய நல்ல தலைவனை தெரிவு செய்ய சகலரும் வாக்களிக்கு மாறும் இந்தத் தேர்தலை எவ்வித வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் முன்னெடுக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என மட்டக்களப்பு புளியந்தீவு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரிவி சாந்த கணேச குருக்கள் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்