க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்.

 


 

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

“சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்துக்குள் வழங்கத் தயாராக உள்ளோம். மிக விரைவில்  பரீட்சை பெறுபேறுகளை  வெளியிட  வேண்டும்  என்பதே எனது தேவை .இந்நிலையில் பல்வேறு சோதனைகளில் மற்றும் இறுதி முடிவுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம் . இந்த முடிவுகளை செப்டெம்பர் மாதத்திற்குள் வழங்குவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.