சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் சின்னத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் பேரணியுடன் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் , இராஜாங்க அமைச்சர் ஒருவரின் அனுசரணையுடன் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் சட்டவிரோத தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.