வரதன்
எமது மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அதனை உருவாக்கிக் கொடுக்க முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்- தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பு.பிரசாந்தன் தெரிவித்தார்
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற இந்த ஜனாதிபதித் தேர்தலில் தலை குனிந்து இருக்கின்ற எமது சமூகம் இன்று கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப தலை நிமிர்ந்து நிற்கின்றது என்றால் அனைவரும் நன்கு சிந்தித்து நாட்டின் பொருளாதார நிலையை கட்டியெழுப்பி அதனை பாதுகாத்து இந்த நாட்டில் சுய நிர்ணய உரிமையையுடன் ஒவ்வொருவருடைய வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிய தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார்
கிழக்கு மாகாணத்தில் அவருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் எமது மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு எமது கட்சியின் தலைவர் தலைமையில் நாம் பெற்றுக் கொடுப்போம்
கடந்த காலங்களில் உருவான வரிசை யுகத்தினை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் அடிப்படைப் பொருட்களை பெற்று கூடியதற்கு தேவையான நமது நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவும் அபிவிருத்திகளை தொடர்ந்து முன் கொண்டு செல்வதற்காகவும்
மாகாண சபை அதிகாரங்களுடாக மக்களுக்கு வேண்டிய உரிமைகளை நிலைப்படுத்துவதற்காகவும் அடிப்படைப் பிரச்சனைகளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அதனை உருவாக்கிக் கொடுக்க முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்
அறகளைப் போராட்டத்தின் போது கைவிட்டு ஓடிச் சென்றவர் தான் இந்த சஜித் பிரேமதாசா மக்களின் கஷ்டங்களில் அரசியல் நடத்துபவர் தான் அனுர . நாட்டை பாரம் எடுக்க சொன்னபோது ஓடியவர்கள் எல்லாம் இன்று வந்து மக்களின் வாக்குகளை கேட்கின்றனர் இது எந்த விதத்தில் நியாயமாகும் என
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பு.பிரசாந்தன் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்