லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தவிசாளர் முதித பீரிஸ் பதவி விலகினார்

 


லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தவிசாளர் முதித பீரிஸ் (Muditha S. G. Peiris) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாளை (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்றும் முதித பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.