வரதன்
தமிழரசு கட்சியின் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்) வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் என தெரிவித்தார்
இந்த வாரம் இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாரமாக இருப்பதனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் உறுதியாக தபால் மூலம் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும்
இந்த பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் நமக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தனர் தமிழரசு கட்சியையும் இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எமது பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தில் தெரிவித்திருந்தனர் ஆனால் தமிழரசு கட்சிக்குள்ளேயே இவ்விடயம் சம்பந்தமாக இரு வேறு கருத்துக்கள்
தெரிவிக்கப்பட்டு இருந்ததுஇருப்பினும் நேற்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின்
மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜனாதிபதி வேட்பாளர்
சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர்
இந்த அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் இதற்குரிய முடிவை மக்கள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊட சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்