உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள VAT வரி முற்றாக நீக்கப்படும்- அனுரகுமார திசாநாயக்க

உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள VAT வரி முற்றாக நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.