2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் நேற்று 30.10.2024 நடைபெற்றது
குறிப்பாக மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள், காவல்துறையினர் ,தேர்தல்அலுவலக உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் தமக்கான தபால் வாக்கினை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
அதேபோல் வவுனியா மாவட்டத்திலும் குறித்த வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்றுவருகிறது.
வன்னிதேர்தல் மாவட்டத்தில் 14,060 பேரின் தபால் வாக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5,942 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4,171 பேரும், முல்லைத்தீவில் 3,497 பேரின் தபால் வாக்கு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நேற்றைய தினம் வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பானது நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும்.