உயிர்காக்கும் மருந்து பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 


டிப்தீரியா தொற்று, உயிர்காக்கும் மருந்து  பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது.

டிப்தீரியா(Diphtheria) எனும் கொடிய நோய் ‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே’ என்ற வகை பாக்டீரியாக்களால் பரவுகிறது.

இந்தக் கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும் உணவு விழுங்குவதையும் தடுப்பதால் இது தொண்டை அடைப்பான் என அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று எளிதில் ஏற்படும். பெரும்பாலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் வயதானவர்களையும் இது பாதிக்கும். டிப்தீரியாவை குணப்படுத்த ‘டிப்தீரியா ஆன்ட்டி-டாக்சின்’ எனும் உயிர்காக்கும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த மருந்து பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக  தெரிய வந்துள்ளது.