பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 10,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 


பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 10,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 764 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ள நிலையில், அதில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 690 குழுக்கள் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.