ஹமாஸ் பிடியில் இருக்கும் 101 பணயக் கைதிகளை மீட்கும் வரையிலாவது இந்தப் போர் தொடரும்- இஸ்ரேல் பிரதமர்

 


அக்டோபர் 7 தாக்குதல் நடந்தது முதலே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொல்வது இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது. சின்வரை கொன்றதால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தான் ‘பழிதீர்த்துவிட்டதாக” கூறினாலும், குறைந்தபட்சம் ஹமாஸ் பிடியில் இருக்கும் 101 பணயக் கைதிகளை மீட்கும் வரையிலாவது இந்தப் போர் தொடரும் என்று  அறிவித்துள்ளார்.

மேலும் “பணயக் கைதிகளின் குடும்பங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். போரில் இதுவொரு முக்கியமான தருணம். நமது அன்புக்குரியவர்கள், அனைவரும் வீட்டிற்குத் திரும்பும் வரை நாங்கள் முழு பலத்துடன் தொடர்ந்து போரிடுவோம்,” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

ஆனால், தற்போதைய சூழலில், பணயக் கைதிகளை திருப்பிக் கொண்டுவர ஏதுவான ஒரு போர் நிறுத்தம் கொண்டுவரப்படும் என்று கருதியதாக இஸ்ரேலில் உள்ள பணயக் கைதிகளின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.