இணையத்தளத்தில் நிதி மோசடி, 15 சீனப் பிரஜைகளைக் கொண்ட மற்றுமொரு குழு கைது .

 


இணையத்தளத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 சீனப் பிரஜைகளைக் கொண்ட மற்றுமொரு குழு, வெலிக்கடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15 கணினிகளும், 15 கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணையத்தள நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுமார் 180  சீனப் பிரஜைகளை  பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.