இவ்வருடத்தில் 1,548,299 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

 


ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து 18,078 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 4,504 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,495 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,548,299 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.