மகாத்மா காந்தியின் 155 ஆவது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

 

 

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில்  இந்நிகழ்வு    2024.10.02 இடம்பெற்றது. 
 
இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் , நலன் விரும்பிகள், ,பொதுமக்கள்   என  பலரும் கலந்துகொண்டிருந்ததுடன்  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள    காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.