17 வயதுடைய மாணவன் ஒருவன் பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் .

 


வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயின்று வந்த பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஆனமடுவவில் பதிவாகியுள்ளது.

ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன தொழிநுட்ப கற்கை நெறியை பயின்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட அதே பேருந்தில் சிக்கி பலத்த காயமடைந்து ஆனமடுவ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ மஹா உஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சாமிக்க பிரபாத் பெர்னாண்டோ என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பேருந்து தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் வைத்து பழுது பார்க்கும் (வயரிங்) பணிக்காக வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், திடீரென மாணவன் அதில் ஏறி வழுக்கி, பேருந்தின் சில்லில் சிக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேரூந்து ஆனமடுவ பொலிஸாரால் பொறுப்பேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.