இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 143 பேர் உயிரிழந்தனர்.

 


இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 143 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம்  திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ்  அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 1,400-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர். 250 பேர் பணையக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். 3,500 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா பகுதிகளில் ஹமாஸ் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தரை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே சுமார் ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.

ஐ.நா. அமைப்புக்கு தடை: இதன் காரணமாக ஐ.நா. நிவாரண அமைப்புக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான புதிய சட்டம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அடுத்த 90 நாட்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டத்தால் காசா பகுதிமக்கள் உணவு, குடிநீர் இன்றி பரிதவிக்கும் நிலை ஏற்படும் என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.