தேசிய நுளம்பு கட்டுப்பாடு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது .2024.10.24





 














 FREELANCER

 

 

 

தேசிய நுளம்பு கட்டுப்பாடு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் அபாய வலயமாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் சோதனை நடவடிக்கை இன்றைய தினம் 2024.10.24முன்னெடுக்கப்பட்டது .

 இவ் நிகழ்ச்சியானது சுகாதார வைத்திய அதிகாரி உதயகுமார் வழிநடத்லில்

பொது சுகாதார செயற் திட்டத்தின் அடிப்படையில் , தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது .

தேசிய நுளம்பு கட்டுப்பாடு வாரத்தை முன்னிட்டு டெங்கு நுளம்பு அதிகமாக பெருகும் இடங்களில் அபாய வலயமாக காணப்பட்ட பிரதேசமான இருதயபுரம் பொதுச் சுகாதார பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து சுகாதார உத்தியோகத்தர் , ஊழியர் இவ் செயற்பாட்டு நடவடிக்கையில் பங்கேற்றனர்.

 இன்றைய டெங்கு பரிசோதனை செயல் திட்டத்தில் மட்டக்களப்பு பிராந்திய தொற்று நோயியல் அதிகாரி A.கார்த்திகா மற்றும் பூச்சியியலாளர் தர்சினி குணநீதன் ஆகியோரும் இணைந்திருந்தனர் .

மக்கள் குடியிருப்புகள் பாடசாலைகள் , அரச நிறுவனங்கள் , பொதுக்கட்டடங்கள் , கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணிகள் உட்பட அனைத்து இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.