FREELANCER
சர்வதேச முதியோர்விழா மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற அனுசரணையில் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல வளாகத்தில்2024.10.23 மாலை இடம் பெற்றது .
விபுலானந்தர் முதியோர் இல்ல முகாமையாளர் தலைமையில் முதியோர் விழா நடை பெற்றது .
பிரதம விருந்தினர்களாக திருமதி சிராயினி சிவநாயகம் (sso erpa manmuna inorth) மற்றும் திருமதி துஷ்யந்தினி வேல்நாயகம் (erpa kachcheri) ஆகியோர் கலந்து கொண்டனர் .
சிறப்பு விருந்தினராக திருமதி .நிலூஜா கிரி ஷாந்தன் பங்கேற்றிருந்தார் .
விருந்தினர் வரவேற்போடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதியோர் தின விழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன .
மேலும் சிறுமியர்கள் கலாசார நடனங்கள் ,முதியோர் நடனங்கள் என்பன இடம் பெற்றன.
விழா முடிவில் போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .
அத்தோடு இல்ல முதியோர்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன .
முதியோர் இல்ல திருமதி சுபத்ரா நன்றியுரை வழங்கினார் .