‘மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கிழக்கின் ஓவியத் திருவிழா’ஓவிய கண்காட்சி-2024

 


 

 









































FREELANCER




கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்தும் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ஓவிய கண்காட்சி 2024.10.25 காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பமாகியது .25.10.2024 தொடக்கம் 27.10.2024 வரை மூன்று நாட்கள் கண்காட்சி இடம் பெற உள்ளது .


சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர் .
இந்நிகழ்வில் மாவட்ட கலாச்சார இணைப்பாளர் தமிழ் . மலர்ச்செல்வன் ற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கற்கைகள் நிறுவக கட்புல மற்றும்

தொழில்நுட்பத்துறை தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

கண்காட்சியில் ஓவியங்கள், கைப்பணி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு இயற்கை காட்சிகள் மட்டக்களப்பு மக்களின் கலாச்சார பாரம்பரிய வாழ்க்கைச் சூழலைப் பிரதிபடுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

இந்த ஓவிய திருவிழாவை பெருமளவிலான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு கண்காட்சி பார்வையிட்டு வருகின்றனர் .