FREELANCER
மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலை விளையாட்டு விழா ராமகிருஷ்ண மிஷன் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது .
கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்கள் விளையாட்டு விழாவுக்கு தலைமை தாங்கினார் .
விழாவுக்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் அனுரேகா விவேகானந்தன் , மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் T. மேகராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
ஆரம்ப நிகழ்வாக பொது முகாமையாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதோடு , அதிதிகளால் மிஷன் கொடி மற்றும் பாடசாலைகொடியும் ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்திய பிரமாணத்தோடு விளையாட்டு விழா ஆரம்பமானது .
விளையாட்டுப்போட்டிகள் அனைத்தையும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் நெறிப்படுத்தி இருந்தார்கள்
விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றி பெற்ற சாரதா பாலர் பாடசாலை சிறார்களுக்கு பொது முகாமையாளர் , மற்றும் அதிதிகளால் சான்றிதழ்களும் ,வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
விளையாட்டு விழாவுக்கு சாரதா பாலர் பாடசாலை பாடசாலை ஆசிரியர்கள், சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .