மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின விழா 2024 இன்று 2024.10.07 கல்லூரியின் நடராஜானந்தா மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் தலைமையில் இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக கல்லூரியில் தேசிய மட்ட தமிழ்த் தின பேச்சுப் போட்டியிலே தோற்றி முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்த செல்வி நிமலகுமார் டரிக்ஷாவை கௌரவித்ததோடு ஆரம்பமானது.
ஆசிரியர்களை
அதிபரின் அனுசரணையோடும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பாடசாலை பழைய மாணவர்
சங்கமும் சேர்ந்து கௌரவித்தார்கள். அத்தோடூ ஆசிரியர்களின்
கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ஆசிரியர் நலன்புரிச் சங்கச் செயலாளர்
திருமதி நிரோஷினி ஹரிகரராஜ் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவு
பெற்றது.