அகில இலங்கை சைவ பண்டிதர் சபை வருடந்தோறும் இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகளை நடாத்திவருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 2025 ஆண்டு நடைபெற இருக்கும் மேற்படி பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இப்பரீட்சைகளை 08-08-2025 தொடக்கம் 10-08-2025 வரை நடாத்துவதற்கு சபை திட்டமிட்டுள்ளது. இப்பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 30-11-2024 ஆகும். பரீட்சைகள் தமிழ் மொழியும் இலக்கணமும், சைவ சித்தாந்தம், திருமுறைகளும் தோத்திரங்களும், வரலாறு, சைவப் பண்பாடுகள் என்னும் ஐந்து பாடங்களாக நடைபெறும்.
இப்பரீட்சைகளுக்கு நிகழ்நிலை மூலமாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். நிகழ்நிலை விண்ணப்பபடிவம், தபால் மூல விண்ணப்பப்படிவம் என்பவற்றை சைவத் தமிழ் மன்றத்தின் இணையத்தளத்தில் (www.saivatm.org) பெற்றுக்கொள்ளலாம். மேலதிக தகவல்களை தொலைபேசி மூலமாக பெற்றுக்கொள்ள 0752845295 / 0779189919 என்னும் இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.
2024 ஆண்டு நடைபெற்ற மேற்படி பரீட்சைகளில் மூவர் சைவ பண்டிதர் பரீட்சையிலும் எண்மர் இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையிலும் சித்திபெற்ற பட்டம்பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.