தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு அருகில் ஆரம்பப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 22 மாணவர்களும், மூன்று ஆசிரியர்களும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம், தீ விபத்தில் சிக்கிய 19 பேர் உயிர் தப்பினர், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பேருந்த்தின் முன்பக்க இடது டயர் வெடித்துச் சிதறியதால் சக்கரத்தில் தீப்பிடித்ததாகக் கூறினர்.
இதனால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, இடைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதால், தீ மளமளவென வேகமாக பரவியதாக குறிப்பிட்டுள்ளனர்.