மட்டக்களப்பு பாலமுனை சந்தியிலிருந்து ஆரையம்பதி வைத்திய சாலைக்கு இன்றைய தினம்( 23.10.2024) விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

 















FREELANCER.




உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு CARITAS நிறுவகத்தின் அனுசுரனையுடன் தலசீமியா செயற்திட்டத்தின் கீழ் இவ் விழிப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது. இவ் பேரணியில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ,

பொதுமக்கள் ஆன்மீகத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

ஊர்வலமானது பாலமுனை சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வரை இடம் பெற்றது

இதில் இரத்த தானம் செய்வோம் உயிரைக் காப்போம் என்பன போன்ற பல்வேறுபட்ட பதாகைகளை ஏந்தி வண்ணம் பேரணியினர் பங்கு பற்றினார்கள் இவ்விழிப்புணர்வு பேரணியானது CARITAS நிறுவகத்தின் பனிப்பாளர் அருட்தந்தை எஸ். எல் ஜெய நிக்சன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது...