பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் 3 பேர் கைது .

 


தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான வீலஉட பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நவ குறுந்துவத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்படி பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் நீர்கொழும்பு மற்றும் மீதலாவ பிரதேசங்களைச் சேர்ந்த 29, 39 மற்றும் 55 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.