33 சுயேட்சைக் குழுக்களும், 23 கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பில் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளன .

 

 


 வரதன்

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக  வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதி பணிகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வண்ணாத்திபூச்சி சின்னத்தில் பசீர் சேகுதாவூத் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட  முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனநாயக தேசிய கூட்டணி கட்சியில் தபால்பெட்டி சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் - தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் சூரியன் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எஸ்.அருண்தம்பிமுத்து தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
பொதுஜன பெரமுன சார்பில் மொட்டு சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் குதிக்க ரொசான் அமிந்த ஜயசிங்க தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோன்று ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் - கழுகு சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட  நா.விஸ்னுகாந்தன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் - மரம் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட  எம்.எல்.ஏம்.எம். ஹிஸ்புல்லா  தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

புதிய ஜனநாயக முன்னணி   சார்பில் - சிலிண்டர் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற போட்டியிட சி.சுதர்சன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.இதேபோன்று சர்வஜன பலயே கட்சி சார்பில் - பதக்கம் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மொகமட் சாபில் வேட்புமனு தாக்கல்.