மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட சுமார் 40 காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பாதகமான நிபந்தனைகளுடன் கடந்த காலங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 40 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மீளாய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் கீழ் மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட சுமார் 40 காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அதன் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டங்களின் மூலம் 5 மெகாவாட் முதல் 100 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் செயலாளர் கூறுகிறார்.
இந்த திட்டங்களை ஒப்பந்தம் செய்யும் போது நாட்டுக்கு பாதகமான பல நிபந்தனைகளின் கீழ் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இத் தட்டங்களுக்கான காணித் தெரிவில், காணிகளை விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் காணியை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
அந்த திட்டங்களில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் போது, ஒரு அலகுக்கு செலவிடப்படும் தொகை மற்றும் திட்டத்தால் ஏற்படும் பொருளாதார பலன்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
குறித்த குழுவின் அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் வழங்குமாறு குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.