சந்தையில் 45 ரூபாவிற்கும் குறைவான சில்லறை விலையில் முட்டையொன்று விற்கப்படுகிறது .

 


ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் முட்டைகளைச் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இணக்கம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, தற்போது சந்தையில் 45 ரூபாவிற்கும் குறைவான சில்லறை விலையில் முட்டையொன்று கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.