ஜீவனானந்தம் நற்பணி மன்றத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மூதூர் ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்தில் நடைபெற்ற நடைபவனி ஊர்வலமும், கற்றல் உபகரணம்வழங்கல் நிகழ்வும்.


















 









 

 

மட்டக்களப்பு-நொச்சிமுனையில் 2020.10.25அன்று ஸ்தாபிக்கப்பட்ட ஜீவனானந்தம் நற்பணிமன்றமானது கடந்த 26.10.2024 சனிக்கிழமை தனது மன்றத்தின்  4ஆம் ஆண்டு நிறைவு விழாவினை திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் ஈச்சிலம்பற்றுப் கஷ்டப்பிரதேசத்தில்
9 கிராமங்களை உள்ளடக்கி கஷ்டமான 87 மணவர்கள் ஒவ்வொருத்தருக்கும் ரூபா 5025/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

 நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன்   பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மஹராஜ் அவர்களின் ஆசியுடன் மன்றத்தின் தலைவர் கு.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.   நிகழ்வில் பிரதம விருந்தினராக பட்டிருப்பு கல்விவலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.சிவானந்தம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  அத்துடன்  நிகழ்வில் கௌரவவிருந்தினர்கள்,சிறப்பு விருந்தினர்கள் மற்றும்
ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின் அங்கத்துவர்கள்,
பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் ,
பிரதேசமக்கள்,
இராமகிருஷ்ணமிஷன் மாணவ மாணவிகள், பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

அதனைத்தொடர்ந்து சுவாமிஜி அவர்களாலும் மற்றும் பிரதமவிருந்தினராலும் பயன்தரு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டது.