தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை

 



சர்ச்சைக்குரிய சூழலுக்கு முகம் கொடுத்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர  தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.